Chennai weather latest updates Kumbakonam received convective rain : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தமட்டிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவக்கூடும். குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். இரவில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிக அளவு மழையைப் பெற்ற பகுதிகள்
கும்பகோணம், கொடைக்கானல், மற்றும் உதகையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மிதமானது முதல் கனமழை பெய்தது. கும்பகோணம் பகுதியில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டெல்டா பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருதால் சம்பா சாகுபடி செய்ய காத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்
நேற்று அதிகபட்சமாக கோவையின் சின்னக்கல்லாறு பகுதியில் 3 செ.மீ மழை பதிவானது. கோவையின் வால்பாறை, காஞ்சியின் தாம்பரம், நீலகியின் தேவலா மற்றும் வால்பாறை தாலுகா அலுவலக சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவானது. திண்டுக்கல், காஞ்சி, திருப்பூர், புதுக்கோட்டை, மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
01:00 மணி வானிலை நிலவரம்
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.