Chennai Weather News: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இன்று மழை பெய்கிறது. 8 மாவட்டங்களில் நாளை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Weather latest : Tamilnadu weather : காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை
Weather Latest: இன்னும் 3 நாள் மழை... எங்கெங்கு தெரியுமா?
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 26) வெளியிட்ட தகவல்கள் வருமாறு: தமிழகத்தின் தென் பகுதியில் கடலோரப் பகுதியில் சில இடங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு இருக்கிறது.
Chennai Weather News: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் அதிகபட்சமாக 7 செமீ மழை
Chennai Weather Forecast: வானிலை அறிக்கை
நாளை (நவம்பர் 27) கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை இருக்கிறது.
28-ம் தேதியும் தெற்கு கடலோர தமிழகத்தின் ஓரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். 29, 30-ம் தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழை இருக்கலாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரம் பொதுவாக வானம் மேகமூட்டமாக காணப்படும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
குமரிக் கடல் பகுதியில் சூறைக் காற்று வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்கு செல்லவேண்டாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் அதிகபட்சமாக 7 செமீ மழை பெய்திருக்கிறது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய இடங்களில் 4 செமீ மழை பெய்திருக்கிறது.
மேற்கண்ட தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.