chennai weather report Thiruvarur puducherry receive heavy rainfall today : கோடை காலத்தின் கத்திரி வெயில் பொழுதில் வீட்டுக்குள் அமர்ந்திருப்பது ஒன்றும் அத்தனை அழகானதோ அல்ல அத்தனை ரம்மியமான விஷயமோ இல்லை. அதுவும், சமையல் கட்டில் வெந்து புலம்பும் அம்மாக்களுக்காகவே மழை பெய்யலாம் என்று தான் கேட்க வேண்டியதாக இருக்கிறது. கடந்த ஆண்டை போல் பொய்த்துப் போகாமல், கோடை மழை திருவாரூர் மாவட்டத்திலும் புதுவையிலும் கொட்டித் தீர்க்கிறது. திருவாரூரின் மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கச்சனம், கடிமேடு, ஆதிரெங்கம் போன்ற பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது.
அதே நேரத்தில் அங்கிருக்கும் கொரடாச்சேரி, மாங்குடி, ஆலத்தம்பாடி, கூத்தாநல்லூர் வரம்பியம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டையின் உள்ள கந்தர்வர்க் கோட்டை. ஆதனக்கோட்டை, வளவம்படி ஆகிய பகுதிகளிலும் சீரான மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள திருக்கனூர் மற்றும் வம்புட்டு ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க : சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – இயல்பு வாழ்விற்கு தயாராகும் ஆந்திரா!
மேல் காற்று சுழற்சியால் இந்த பகுதிகளில் ஏற்கனவே மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் அறிவித்திருந்தார். காஞ்சி, திருவள்ளூர் மற்றும் சென்னை பெல்ட்டில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
Some smalls bands trying to move into Chennai, Some places in Chennai City and KTC may get small spells of sharp rains today.
— TamilNadu Weatherman (@praddy06) May 12, 2020
ஆனாலும் மக்களே நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், தேவையில்லாமல் வெளியே செல்வதால், அதுவும் மழை பெய்திருக்கும் காலத்தில் செல்வதால் நமக்கு நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் அதிகம். எனவே மொட்டை மாடியில் சென்று மழையை ரசியுங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே சென்று திரும்பினால் போதுமானது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை , ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.