Chennai weather today Chennai heavy rain alert IMD report : தென்மேற்கு பருவமழை வருகின்ற 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி வருகிறது. இம்முறை மதுரையை ஏமாற்றிய பருவமழை தானாகவே இன்னும் சில நாட்களுக்கு மதுரை மக்களை மனம் குளிரடையச் செய்யும் என்று தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் கூறியுள்ளார். உள்தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அவர் அறிவித்தார்.
இன்று கனமழைக்கான வாய்ப்புகள் இருக்கும் பகுதி
விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டடத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமானது வரை பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் வானிலை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும் என்றும், குறைந்த பட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை : சென்னை வானிலை மையம்