இன்றைய வானிலை : மேக மூட்டத்துடன் காணப்படும் சென்னை… மழைக்கு வாய்ப்புள்ளதா?

Southwest Monsoon : பருவமழை துவங்கும் முன்பே மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள், குழாய்கள் ஆகியவற்றை முறையே சரி செய்து வைக்க வெதர்மென் வேண்டுகோள்

Cyclone Maha latest updates heavy rain alert given to 23 districts
Chennai Weather Today Forecast

Chennai Weather Today Forecast  : அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வெப்பநிலை மெல்ல மெல்ல குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை துவங்கி அடுத்து வரும் மூன்று நாட்களுக்கும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தமட்டில், 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்புகள் குறைவு தான். வெப்பநிலை : அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கி, ஜூன் 6ல் இருந்து கேரளத்தில் மழைப் பெய்யத் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் அளித்துள்ளது.

சென்னையில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் இரண்டு நாட்களுக்கு முன்பு முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மழை நீர் சேகரிப்புத்திட்டத்தை முறையாக்கினால் மட்டுமே வருங்காலத்தில் இது போன்ற வறட்சியில் இருந்து மக்கள் மீள இயலும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : தென்மேற்கு பருவ மழை 5 நாட்கள் தாமதமாகும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai weather today forecast

Next Story
Tamil Nadu Lok Sabha Election 2019 Exit Poll: தமிழகத்தில் பெரும்பான்மை பெறும் திமுக… கருத்துக் கணிப்புகளின் துல்லிய விபரம் இங்கேTamil Nadu Exit Poll, Exit Poll for Tamil Nadu 2019, எக்ஸிட் போல் 2019 முடிவுகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com