Chennai weather today latest updates heavy rainfall alert : இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Chennai weather today latest updates heavy rainfall alert :
திருவள்ளூர், சென்னை, காஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, சிவகங்கை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை, தேனி, நெல்லை, குமரி, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. நேற்று நள்ளிரவு சில இடங்களிலும் இன்று காலையில் சில இடங்களிலும் தூரல் மழை பெய்தது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : அடுத்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்
நேற்று அதிக அளவு மழை பொழிவை பெற்ற இடங்கள்
நேற்று கன்னியாகுமரியின் மயிலாடி பகுதியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, கன்னியாகுமரி மெயினில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லாறு, பேச்சிப்பாறை, வால்பாறை தாலுகா அலுவலகம், பூதபாண்டி ஆகிய பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரியின் குளச்சல், நீலகிரியின் தேவாலா, நடுவட்டம், ராமநாதபுரத்தின் ஆர்.எஸ்.மங்களம், கன்னியாகுமரியின் எரனியல் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.