Chennai weather today latest updates Southwest Monsoon : இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று மழைக்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதுச்சேரியிலும் மழைக்கான வாய்ப்புகள் உண்டு. நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், டி.நகர், நந்தனம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் நேற்று இரவு துவங்கி இன்று காலை வரை மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சம் வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.
நேற்று அதிக மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
நேற்று கோவை மாவட்டம் சின்ன கல்லாறு பகுதியில் 9 சென்டி மீட்டர் அளவிற்கு கனமழை பெய்துள்ளது. வால்பாறையில் சோலையாறு மற்றும் தாலுகா அலுவலகம் பகுதிகளில் 7 மற்றும் 5 சென்டிமீட்டர் மழை முறையாக பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி மற்றும் நீலகிரி மாவட்டம் தேவலாஆகிய பகுதிகளில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும் தேனி, கடலூர், அரியலூர், நீலகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : பல்வேறு இடங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்