சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை... இன்று இரவும் வான வேடிக்கை உண்டு...

Chennai weather : அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

Chennai weather : அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai weather today latest updates southwest Monsoon rainfall

chennai The Indian meteorological department has issued a cyclone alert on the Bay of Bengal coast in Tamil Nadu between Karaikal and Chennai close to Puducherry

Chennai weather today latest updates Southwest Monsoon rainfall : நேற்று காலை முதலே சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. மறுபடியும் எப்போது தான் மழை வரும் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கையில், நேற்று சாயங்காலம் 8 மணி துவங்கி சென்னையில் உள்ள அண்ணாநகர், டி.நகர், நந்தனம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மற்றும் பல்வேறு தென்சென்னை பகுதிகளில் ஆகிய இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அலுவலகங்களிலிருந்து வீடுகளுக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இன்று மழை பெய்யும்  வாய்ப்புகள் உள்ள இடங்கள்

Advertisment

இன்று சென்னை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : இன்றைய வானிலை : திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை!

கனமழை எச்சரிக்கை :

இன்று மற்றும் நாளை தமிழகத்தில் வேலூர் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, மதுரை, தேனி, மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

சென்னை வானிலை

Advertisment
Advertisements

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.  மாலை அல்லது இரவு கனமழைக்கான வாய்ப்புகள் உண்டு.

Chennai Rain In Tamilnadu Tamilnadu Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: