Chennai weather today monsoon 2019 latest updates : தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்னையில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் நீர் ஆதாரங்களான ஏரிகளில் நீர் சேகரம் ஆகவில்லை என்றாலும், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து இருக்கக்கூடும். இன்று வட தமிழக மாவட்டங்களான காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களிலும் இன்று மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை இன்று மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மதியத்திற்கு மேல் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்.
நேற்று அதிகபட்ச மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
நேற்று காஞ்சிபுரத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் ஏழு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகம், நீலகிரியின் ஹேத்தி வேலி, வேலூரின் காவேரிபாக்கம் ஆகிய இடங்களில் ஐந்து சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
செம்பரம்பாக்கம், தாம்பரம், கொளப்பாக்கம் ஆகிய இடங்களில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் நிலகிரி சிவகங்கை உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்