chennai weather today report weather : தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் நாளை முதல் தென் மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
chennai weather:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் பல இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது.சென்னையில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, கிண்டி, திருவான்மியூர், மாம்பலம், கோயம்பேடு, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெரம்பூர், உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் தேங்கியது.
சென்னை வானிலை மையம்:
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் 6ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா உறுதி
அடுத்த, 48 மணி நேரத்தில், திருவள்ளூர், வேலுார், விழுப்புரம், கடலுார், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை,சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil