Chennai weather today southwest monsoon latest updates : சென்னையில் நேற்று மாலை துவங்கி இன்று அதிகாலை வரை நல்ல மழை பெற்றுள்ளது. நேற்று மாலை துவங்கிய கனமழை 4 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித்தீர்த்தது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் நேற்று மாலை இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்பிற்கு உள்ளானது. சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்!
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல்வேறு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவக் கூடும்.
நேற்று அதிக அளவு மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
அதிகபட்சமாக நேற்று கோவை சின்னக்கல்லாறு பகுதியில் 7 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
நீலகிரியின் தேவலா பகுதியில் சுமார் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வால்பாறை போஸ்ட்டில் 4 செ.மீ மழையும், தாலூகா அலுவலகம் மற்றும் நீலகிரியின் ஜி பஜாரில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, வேலூர், நீலகிரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : இன்றைய வானிலை : வட தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்