Chennai Weather Today Tamil Nadu Monsoon 2019 Water Scarcity : வேலூர் மாவட்டம் கலவை பகுதியில் 4 செ.மி. மழை பதிவாகியுள்ளது. அதே போல் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தேவலா பகுதியில் 2 செ.மீ மழையும், காரைக்குடி (சிவகங்கை) பகுதியில் 2 செ.மீ மழையும், சேலம் ஓமலூர் பகுதியில் 2 செ.மீ மழையும் நேற்று பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில் 10 எம்.எம். மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
இன்று எங்கே மழை ?
மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்திருக்கும் ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Heatwave warning
வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளதுனர். திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசக்கூடும். அதே போன்று சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மதுரை, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை மழை பதிவாகக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மக்கள் காலை 11 மணியில் இருந்து மாலை 4 வரை வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானிலை நிலவரம்
வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஆனால் மழைக்கு வாய்ப்பில்லை. அதிகபட்ச வெப்பமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக் கூடும். குறைந்த பட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
மேலும் படிக்க : நீரின்றி அலையும் தமிழகம்… வருங்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகாத வகையில் திட்டங்கள் அமைக்கப்படுமா?