Today rain report : தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளது. தமிழகத்தில் இன்று வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.பாலச்சந்திரன் நேற்று அளித்த பேட்டியில் சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
”தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.
இன்னும் எத்தனை நாட்கள் சென்னையில் மழை பெய்யும். வெதர்மேன் சூப்பர் அப்டேட்.
வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனம் பகுதியில் 9 செ.மீ., ஆரணி, திருப்பத்தூரில் 8 செ.மீ., உத்திரமேரூரில் 7 செ.மீ. மழை பதிவாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1ம் தேதி முதல் தற்போது வரை 89 மி.மீ. மழை பதிவாக உள்ளது” என்று கூறியுள்ளார்.