Chennai Weather Today Updates : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது வானிலை ஆராய்ச்சி மையம். சேலம், நாமக்கல், கரூர், தேனி, பெரம்பலூர், அரியலூர், மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும். குறைந்த பட்சமாக 29டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
வெயில் எச்சரிக்கை
இன்னும் ஒரு சில தினங்களுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் யாரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க : சென்னையில் மீண்டும் பூதாகரம் ஆகியுள்ள தண்ணீர் பஞ்சம் : தாங்குமா நெஞ்சம்!!!