Chennai weather today : வறண்டு கிடந்த சென்னை கடந்த சில நாட்களாக ஜில்லென்று காட்சி தருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அதுவும் மாலை தொடங்கி பல இடங்களில் நள்ளிரவு வரை மழை பெய்தது.
மேலும் படிக்க : அடுத்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்
ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால் இதன் தாக்கம் சென்னையில் மழையை காட்டும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
weather updates: மழை தொடர வாய்ப்பு!
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், கடலோர மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளது. இதுக் குறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர், “வங்க கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளை ஒட்டி, வளி மண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது.
Tamil Nadu news today live updates
இது பருவ மழையின் தீவிர நிலை ஆகும். இதனால் தான் நேற்று மாலை சென்னையில் மிதமான மழை பெய்தது. சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை இன்று தொடரும். பகலில் வெயில் நிலவும்; மாலை மற்றும் இரவு நேரங்களில், மழை பெய்யும்.
ஜூன், 1 முதல், நேற்று வரை, நாடு முழுவதும் எடுத்த கணக்கீட்டின் படி, தென் மேற்கு பருவ மழையானது இயல்பை விட 1% கூடுதலாக பெய்துள்ளது. தென் மாநிலங்களில், இயல்பை விட, 6 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது” என்று கூறினார்.