கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் ஒயின் தயாரித்ததாக திருவொற்றியூரை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது தனது இரண்டு மகன்களுடன் வீட்டில் திராட்சை பீர், தயாரித்ததற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கைது செய்யப்பட்ட வி.மேரி (வயது 65), எண்ணூர் ஜே.ஜே நகர் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 60 லிட்டருக்கும் மேலான பீர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது மகன்கள் சாலமன் வயது 40, ராஜ்குமார் வயது 38 ஆகியோரும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளில் அடுத்தடுத்து கொரோனா நோயாளிகள் தற்கொலை
கடந்த மாதம் ஏப்ரல் 26-ஆம் தேதி, வீட்டில் ஒயின் தயாரித்ததற்காக மேரி கைது செய்யப்பட்டு, அவரது வீட்டிலிருந்து 5 லிட்டர் ஒயின் கைப்பற்றப்பட்டது. இதனை யூடியூப் வீடியோ மூலம், தான் தயாரித்ததாக கூறியிருந்தார் மேரி. அந்தப் பகுதியில் உள்ள சில இளைஞர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால், வீட்டிலேயே ஒயின் தயாரித்ததாக குறிப்பிட்டார். அதோடு திராட்சை மற்றும் இன்ன பிற பொருட்கள் வாங்குவதற்கும் அப்பகுதி இளைஞர்கள் மேரிக்கு உதவியிருக்கிறார்கள். ஒயின் பாட்டில்களை சப்ளை செய்த மேரியைப் பற்றி குடியிருப்பாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்திருந்தனர்.
ஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிய செங்கோட்டையன்: ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி
இந்த முறை அம்மா மகன்கள் என மூவரும், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு, தாங்கள் தயாரித்த பீரை கொடுக்கும்போது மாட்டிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சட்டத்திற்குப் புறம்பான இந்த திராட்சை பீரை பணத்திற்காக அவர்கள் விற்றதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை தற்போது நடந்து வருகிறது
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”