/indian-express-tamil/media/media_files/eGEVlfbgZLl2iLnHilm8.png)
திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
Dmk | Duraimurugan | திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவர் ஜாபர் சாதிக். இவர், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி போலீசார் இணைந்து போதைப் பொருள் கும்பல் ஒன்றை கைது செய்தனர்.
இந்த வழக்கில், மங்கை திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், இறைவன் மிகப் பெரியவன் படத்தின் நாயகன் மைதீன் மற்றும் சலீம் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த நிலையில், திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். தற்போது, 50 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரூ.2000 கோடி போதைப் பொருள் கடத்தல்: தமிழ் சினிமா தயாரிப்பாளருக்கு வலை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.