Chennai's Anna Salai to be shut from today for all vehicles : இன்று முதல் 12 நாட்களுக்கு சென்னையில் முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமான காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியேறும் நபர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை அறிவித்துள்ளது சென்னை காவல்துறை. தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : என்னது நூடுல்ஸை ஒழிக்கனுமா? சீன பொருட்கள் எதிர்ப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?
செய்தியாளர்களுடன் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ”மாநகரின் மிகவும் முக்கியமான சாலையான அண்ணா சாலை இந்த 12 நாட்களுக்கும் மூடப்பட்டு இருக்கும்” என்று தெரிவித்தார். ஆம்புலன்ஸ் சேவைகளை தவிர இதர சேவைகளுக்கு இங்கு அனுமதி இல்லை என்று கூறுஇயுள்ளார். மேலும் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் இருந்து மக்களை அழைத்து வரும் ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகளுக்கு சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை, அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்களின் அடையாள அட்டையை எப்போதும் கையில் வைத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த துறையில் பணியாற்றும் நபர்கள் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்த இயலாது. ஓரிரு இடங்களில் சாலையை கடக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை மாநகராட்சி முழுவதும் 288 செக்போஸ்ட்கள் மற்றும் பறக்கும் கண்காணிப்பு கேமராக்களை வைத்து மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளது. போலி இ-பாஸ்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் முக கவசங்கள் இன்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சென்னையிலிருந்து வெளியேற முயலும் மக்கள்; ஸ்தம்பித்த செங்கல்பட்டு – வாகனங்கள் பறிமுதல்
தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை 2 கி.மீ சுற்றளவுக்குள் வாங்கி காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் காவல்துறை தரப்பு கூறியுள்ளது. சென்னை காவல்துறையினர் 788 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 300 நபர்கள் உடல் நலம் பெற்று மீண்டும் பணிகு திரும்பியுள்ளனர். 39 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மற்ற காவல்துறையினர் அவர்களவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil