Cherish Chennai Musical Week Metro theru vizha: மெட்ரோவில் பயணிப்பவர்கள் இனி ஜாலியாக தமிழகத்தின் ஆதி இசைகளையும் நடனங்களையும் ரசித்தவாறே தங்களின் பயணத்தை தொடரலாம். சென்னை மெட்ரோ ரெயில் லிமிட்டட் சென்னை இசை வாரத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது. ஜனவரி மாதம் 24ம் தேதி துவங்கி பிப்ரவரி 2ம் தேதி வரையில் இந்த விழா நடைபெறுகிறது.
சென்னை கலை தெருவிழா
இந்த நிகழ்வை நீங்கள் சென்னை கலை தெருவிழா அல்லது மெட்ரோ விழா என்றும் கூட அழைக்கலாம். சென்னை கலை தெரு விழா அமைப்பைச் சேர்ந்த குழுவினர் ஜனவரி 24ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் பல்வேறு மெட்ரோ நிலையங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். ஜனவரி 24 காலை 10 மணி முதல் மதியம் வரை ஒயிலாட்டம் ஏர்போர்ட் மெட்ரோவில் நடைபெறுகிறது. ஒத்தசெவுரு என்ற தமிழ் ராக் பேண்ட் மற்றும் ஓராள் அரங்க அளிக்கை (solo theatre) மற்றும் கர்நாடக இசை விழா சென்னை விமான நிலைய மெட்ரோவில் துவங்கி வண்ணாரப்பேட்டை வரை நடைபெற உள்ளது. தேவராட்டம் மற்றும் பறை இசை நிகழ்வுகள் 11.30 மணி அளவில் வண்ணாரப்பேட்டை மெட்ரோவில் நடைபெற உள்ளது.
ஜனவரி 30ம் தேதி அபிஷேக் என்பவரின் நகைச்சுவை நிகழ்ச்சியும், பிந்துமாலினியின் இசை விழாவும் ஆலந்தூரில் இருந்து மத்திய ரயில் நிலையம் செல்லும் மெட்ரோவில் நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர் ரயில் நிலைய மெட்ரோவில் அதே ந்நாள் மாலை 5.45 மணி முதல் 06.30 மணி வரை ப்ரீத்தி பரத்வாஜின் பரதநாட்டியமும், தீபனின் பறையாட்டமும் நடைபெற உள்ளது.
ஜனவரி 27ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு கோயம்பேடு மெட்ரோவில் ஆன்மஜோதி அமைப்பின் கர்னாடிக் சங்கீத நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதே நாளில் சத்யபாமாவின் ரோட்டரி க்ளப் சார்பில் இசை நிகழ்ச்சி 5 முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 2ம் தேதி மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரையில் மத்திய ரயில் நிலைய மெட்ரோவில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க : 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் எவ்வளவு? கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!