Advertisment

5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் எவ்வளவு? கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 30ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Classes V, VIII board exams fees fixed

Classes V, VIII board exams fees fixed

Classes V, VIII board exams fees fixed : தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை நடத்தக் கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு அலைகள் கிளம்பி வருகின்ற நிலையில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

பல்கலை வித்தகர் கைய்பி ஆஸ்மிக்கு கூகுள் கவுரவம்...

தேர்வு கட்டணம் எவ்வளவு?

நேற்று மதியம் (23/01/2020) வெளியான அறிக்கையின் அடிப்படையில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டணம் ரூ. 100-ஆகவும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டணம் ரூ.200-ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம்  ஏதும் இல்லை. அதே போன்று இந்திய கல்வி உரிமை சட்டத்தின் (RTE Act) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கும் இக்கட்டணம் கிடையாது.

பொதுத்தேர்வு எப்போது?

8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 30ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதே போன்று 5ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 15ம் தேதி துவங்கி 20ம் தேதி நிறைவடைகிறது. 8ம் வகுப்புக்கு தேர்வு தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 25-லும், 5ம் வகுப்புக்கான தேர்வு தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 28-லும் நிறைவடையும். பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : 27 ஏக்கர்… ரூ5000 கோடி… 70,000 பேருக்கு வேலை: உருவாகிறது புதிய ஐடி பார்க்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment