கருணாநிதி கவலைக்கிடம்: பிஸியான முதல்வர் இல்லம், அடுத்தடுத்த சந்திப்புகள் சொல்லும் சேதி

Tamil Nadu CM Edappadi K. Palaniswami Meet M K Stalin, Karunanidhi Health Critical: ஸ்டாலின் வந்து சென்ற சில நிமிடங்களில் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்தார்.

Tamil Nadu CM Edappadi K. Palaniswami Meet M K Stalin, Karunanidhi Health Critical: ஸ்டாலின் வந்து சென்ற சில நிமிடங்களில் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vellore By Election, dmk kathir anand, A.C.Shanmugam, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, வேலூர் லோக்சபா இடைத் தேர்தல்

Vellore By Election, dmk kathir anand, A.C.Shanmugam, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, வேலூர் லோக்சபா இடைத் தேர்தல்

CM Edappadi K. Palaniswami Meet M K Stalin: கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் பிஸியானது. மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அடுத்தடுத்த சந்திப்புகள் நடந்தன.

Advertisment

கருணாநிதி உடல்நிலை நேற்று (ஆகஸ்ட் 6) முதல் கவலைக்கிடமானது. இன்று மதியம் உடல்நிலை மிக மோசமான நிலையை எட்டியது. காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று மாலையில் 24 மணி நேரம் கெடு கொடுத்து அறிக்கை விடப்பட்டது. கருணாநிதியின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அதன்பிறகு அதிகாரபூர்வமாக எந்த அறிக்கையும் இல்லை.

Karunanidhi Health Critical Live Updates: To Read, Click Here

ஆனால் இன்று காவேரி மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதும், அதன்பிறகு நடந்த சில நிகழ்வுகளும் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமான நிலைக்கு சென்றிருப்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

Advertisment
Advertisements

Tamil Nadu CM Edappadi K. Palaniswami Meet M K Stalin, Karunanidhi Health Critical: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகலில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது அவருடன் கனிமொழி, மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோரும் சென்றனர்.

மு.க.ஸ்டாலின் இதற்கு முன்பு எத்தனையோ சந்திப்புகளை முதல்வருடன் நடத்தியிருந்தாலும், அத்தனையும் தலைமைச் செயலகத்தில்தான் நடந்திருக்கின்றன. முதல்முறையாக முதல்வரின் இல்லத்தில் அதுவும் மு.க.அழகிரி, கனிமொழி சகிதமாக சென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

முதல்வருடன் நடந்த சந்திப்பில் கருணாநிதி உடல்நிலைதான் பேசப்பட்ட விஷயம் என்பது அனைவருக்கும் புரிகிறது. ஆனால் எந்தத் தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இது தொடர்பாக இல்லை.

கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தவர், தற்போதும் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார், எனவே அவரது சிகிச்சைக்கு அரசு உதவி செய்யத் தயாராக இருக்கிறது என சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் காவேரி மருத்துவமனையில் திருப்தியாக சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறி, திமுக அதை ஏற்கவில்லை.

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகளில் அரசு உதவி அல்லது ஒத்துழைப்பு வேண்டியே மு.க.ஸ்டாலினின் சந்திப்பு அமைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கம் மற்றும் ராஜாஜி ஹால் தொடர்பான பேச்சுகள் இருந்திருக்கின்றன. இதற்காகவே கனிமொழி, அழகிரி ஆகியோரும் உடன் சென்றனர்.

ஸ்டாலின் வந்து சென்ற சில நிமிடங்களில் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்தார். தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனையும் தனது இல்லத்திற்கு வரவழைத்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

சென்னை முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு, முதல்வர் இல்ல பிஸி, காவேரி மருத்துவமனை பதற்றம் எல்லாம் சொல்லும் செய்தி சந்தோஷமானதாக இல்லை!

Mk Stalin M Karunanidhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: