CM Edappadi Palanisamy gives Rs 2 lakhs to Student Abhinaya for her NASA visit : நாமக்கல் மாவட்டம் கருப்பட்டிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். அவருடைய இரண்டாவது மகள் அபிநயா அங்கு இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார்.
நவம்பர் மாதம் அமெரிக்காவில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆன்லைன் தேர்வு ஒன்றை நடத்தியது. அந்த தேர்வில் அபிநயா பங்கேற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அபிநயாவை அமெரிக்காவிற்கும் வரும்படி நாசா சிறப்பு அழைப்பு விடுத்து இருந்தது.
மேலும் படிக்க : கொரோனாவுக்காக மனிதரை நரபலி கொடுத்த பூசாரி; ஒடிசாவில் அதிர்ச்சி
ஆனால் நாசாவிற்கு செல்ல அபிநயாவிற்கு போதுமான நிதி வசதி இல்லை. அவருடைய நிலையை உணர்ந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அபிநயாவிற்கு உதவி செய்துள்ளார்.
இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அபிநயாவிற்கு ரூ. இரண்டு லட்சத்திற்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கியிருக்கிறார் . இந்த நிதியை பயன்படுத்தி நாசாவில் நடைபெறும் சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் மாணவி அபிநயா பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட டாக்டர் ; இதுக்கெல்லாம் கொரோனா தான் காரணம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“