மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் : கர்நாடக மாநிலம் பகுதியில் இருக்கும் மேகதாது என்ற இடத்தில் இரட்டை தடுப்பணைகளை கட்டும் திட்டத்தில் மும்பரமாக செயல்பட்டு வருகிறது கர்நாடக அரசு. கடந்தவாரம், மேகதாது அணையின் வரைவிற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இதனை எதிர்த்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டமும், பின்னர் கண்டன ஆர்பாட்டமும் நடைபெற்றது.
மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் - ஒரு மனதாக நிறைவேற்றம்
கர்நாடக மாநிலத்தில் அமைய இருக்கும் மேகதாது அணை தொடர்பாக நேற்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மேகதாது அணைக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த தீர்மானம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழகத்தின் அனுமதியின் காவிரி நதியி. எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் குறித்து ஸ்டாலின் கருத்து
நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தாலும், மத்திய நீர்வள ஆணையத்தை மட்டும் கண்டித்திருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கஜ புயல் தொடர்பாக விவாதிக்க சட்டமன்ற கூட்டத்தை நீட்டிக்க கோரிய வேண்டுகோளை ஏற்காததற்காக கண்டனத்தை பதிவு செய்தார்.
மேலும் படிக்க : நேற்று சட்டப் பேரவையில் நடைபெற்ற தீர்மானம் தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க