/tamil-ie/media/media_files/uploads/2020/10/MK-Stalin-Edappadi-Palaniswami-Meeting.jpg)
முதல்வருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அவரதுன் இல்லத்தில் நேரி சந்தித்து, தாயாரின் மறைவு குறித்து துக்கம் விசாரித்தார்.
”மரியாதையும் மதிப்பும் இல்லாத இடத்தில் பாட முடியாது” – விஜய் யேசுதாஸ் வேதனை
முதல்வர் பழனிசாமியின் தாயார் தவசாயம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் காலமானார். உடனடியாக சொந்த ஊர் சென்ற முதல்வர் பழனிசாமி தாயார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் ஆகிய ஊர்களுக்கான அரசுமுறை பயணத்தை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்கு தனது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார். 16 ஆம் நாள் துக்க அனுசரிப்பு நாட்களில் பங்கேற்க வேண்டும் என்பதால், சிலுவம்பாளையத்தில் தங்கிருந்த முதல்வர், முடித்துக்கொண்டு, நேற்று மாலை 6.05 மணிக்குஇருந்து சென்னை புறப்பட்டார்.
எப்போது பயன்பாட்டிற்கு வருகிறது இந்தியாவின் முதல் நீர்விமானங்கள்?
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடியும் ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினர்.
ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் முதல்வர் வீட்டில் இருந்தனர்.
முன்னதாக, முதல்வர் தாயாரின் மறைவுக்கு ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டிருந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.