சிடிஎஸ் நிறுவன கட்டுமானத்தில் முறைகேடு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் காக்னிசன்ட் நிறுவன கட்டிடத்துக்கு அனுமதிகள் பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://youtu.be/GwvIMHVLhIY அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிடிஎஸ் எனும் காக்னிசன்ட் நிறுவனம், சென்னையில் அலுவலக கட்டடம் கட்ட, இந்திய நிறுவனமான எல் & டி- யுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு – குற்றவாளிகளுக்கான […]

cognizant constructions fraud case madras high court
cognizant constructions fraud case madras high court

தமிழகத்தில் காக்னிசன்ட் நிறுவன கட்டிடத்துக்கு அனுமதிகள் பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://youtu.be/GwvIMHVLhIY

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிடிஎஸ் எனும் காக்னிசன்ட் நிறுவனம், சென்னையில் அலுவலக கட்டடம் கட்ட, இந்திய நிறுவனமான எல் & டி- யுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு – குற்றவாளிகளுக்கான தண்டனை முழு விவரம்

இந்த ஒப்பந்ததின் படி, சென்னையில் 27 லட்சம் சதுர அடியில் கட்டங்கள் கட்ட தேவையான அனுமதிகள், உரிமங்கள் பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல் ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இந்த கட்டிடங்களுக்கு அனுமதி, சிடிஎஸ் நிறுவனம் தனது இந்தியன் வங்கி கணக்கில் இருந்து 23 கோடி ரூபாயை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.

அதேபோல, புனேவில் கட்டடம் கட்ட சுற்றுசூழல் துறையின் தடையில்லா சான்று பெற அரசு அதிகாரிகளுக்கு 6 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்..

மேலும், இந்த முறைகேடுகளை அமெரிக்காவின் பங்கு சந்தை ஆணையத்தில் ஒப்புக்கொண்டுள்ள சிடிஎஸ் நிறுவனம், அதற்கான அபராதத்தையும் செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில் சேவை; தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகம் மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகள் சம்பந்தபட்டிருப்பதால், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மார்ச் 9-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, லஞ்ச ஒழிப்புதுறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cognizant constructions fraud case madras high court

Next Story
சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு – குற்றவாளிகளுக்கான தண்டனை முழு விவரம்chennai ayanavaram girl sex abuse verdict 166659 - சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு - 4 பேர் சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com