கோவையில் 400 பவுண்டரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

இந்த விலை உயரவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பவுண்டரி சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

Coimbatore News Nearly 400 small scale foundries stop production in the city

Coimbatore News :  மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி கோவையில் உள்ள 400 பவுண்ரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. கோவை வெட் கிரைண்டர் மற்றும் பம்பு செட்டுகளின் உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியில் பவுண்டரிகள் ஈடுபட்டு வருகின்றன. சமீப காலத்தில் உயர்ந்துள்ள மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த தொழிற்சாலைகள் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 4 மாதங்களில் 15 முதல் 60% வரை,உதிரி பாகங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பிக் அயன், நிலக்கரி மற்றும் ஸ்கிராப் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலையைக் கட்டுப்படுத்துக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளன.

மேலும் படிக்க : ஈஷா யோகாவுக்கு செல்ல வேண்டும் என்றால் இதை நினைவில் கொள்ளுங்கள்!

இந்த தொழிற்சாலைகளை நம்பி 2 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழில்களை சார்ந்தே வெட்கிரைண்டர், பம்பு செட், மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் பொருட்களை உருவாக்கும் தொழில்களும் இயங்கி வருகின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 30 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16ம் தேதி அன்று அடையாள வேலை நிறுத்தமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கிட்டத்தட்ட 12 ஆயிரம் சிறு குறு நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த விலை உயரவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பவுண்டரி சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coimbatore news nearly 400 small scale foundries stop production in the city

Next Story
News Highlights : எம்எல்ஏ செந்தில் பாலாஜி, எம்பி ஜோதிமணி மீதான வழக்கு .. இடைக்கால தடை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express