சென்னை கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு – நடந்தது என்ன?

சென்னையில் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தை சேர்ந்த முகேஷ், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்த நிலையில், தனது நண்பரான விஜய் வீட்டுக்கு முகேஷ் இன்று சென்று அங்கு அவருடன்…

By: November 5, 2019, 6:33:22 PM

சென்னையில் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தை சேர்ந்த முகேஷ், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.


இந்த நிலையில், தனது நண்பரான விஜய் வீட்டுக்கு முகேஷ் இன்று சென்று அங்கு அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

லஞ்சம் கேட்ட தாசில்தாரைக் கதற கதற எரித்துக் கொன்ற விவசாயி..!

விஜய்யின் சகோதரர் உதயா வீட்டின் வெளியே இருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த உதயா வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்த போது, அங்கு முகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

50 முட்டை சாப்பிட்டால் ரூ.2000 பந்தயம்; 42வது முட்டை சாப்பிடும்போது பலியான லாரி டிரைவர்

நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முகேஷை அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனையில் உதயா அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, விஜய் வீட்டை விட்டு வெளியே ஒடி தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

சென்னையில் 3 வயது சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த சிசிடிவி காட்சி (வீடியோ)

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள விஜய்யை தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, கல்லூரி மாணவர் கையில் துப்பாக்கி எப்படி வந்தது என்பது போலீசாரையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:College student gun shot near chennai mukesh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X