நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளில், குற்றவியல் அவமதிப்பைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி பிரதாப் சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Express Exclusive : 3 பிரதமர்கள், 2 முதல்வர்கள், 350 எம்பி.க்கள்… அரசியல் நகர்வுகளை வேவு பார்க்கும் சீனா!
"உயிருக்கு பயந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை நடத்துகின்ற நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது" என நீட் மரணங்கள் குறித்த தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார் சூர்யா.
சூர்யாவின் இந்த விமர்சனத்துக்கு எதிர்வினையாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தில், "என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறை மதிப்புக்குட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை ; 10 ஆயிரம் இந்தியர்களை வேவு பார்க்கும் சீனா!
”எனவே நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிபடுத்த வேண்டும்" எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”