Advertisment

சென்னை, மேற்கு மாவட்டங்களில் மிகுதியான கொரோனா: மொத்த எண்ணிக்கை 2058

COVID-19 Cases in Tamil Nadu:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus. Corona virus tamil news, minister vijayabaskar press meet, அமைச்சர் விஜயபாஸ்கர் பிரஸ்மீட், கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு, Corona virus news in tamil, corona virus tamil nadu news, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms

Latest Corona Reports in Tamil Nadu: சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை படு வேகமாக உயர்ந்து வருகிறது. அதோடு, தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் பதிவான அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுவேயாகும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. மாவட்டவாரியாக பார்த்தால் சென்னை (673), கோவை (141), திருப்பூர் (112), திண்டுக்கல் (80), மதுரை (79) செங்கல்பட்டு, ஈரோடு (தலா 70) ஆகியவைகள் முன்னணியில் உள்ளன.

இந்நிலையில், நேற்று (ஏப்.28) நிலவரப்படி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 80 பெண்களும், 41 ஆண்களும் அடங்கும். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,392 ஆண்களும், 666 பெண்களும் அடங்கும்.

கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இன்று ஒரே நாளில் 7,093 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 30,692 பேரும், அரசு கண்காணிப்பில் 47 பேரும் உள்ளனர். இன்று மட்டும் 27 பேர் பாதிப்பு குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தமாக குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1128 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கும் மற்றும் 1 வயது குழந்தைக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் 68 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 25 ஆக உள்ளது. இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,128 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 902 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகபட்சமா நோயாளிகள் எண்ணிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இதன் மூலமாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை 673 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு 12, கள்ளக்குறிச்சி 3, காஞ்சிபுரம் 1, நாமக்கல் 2 என்று நோயாளிகள் எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் புதிய நோயாளிகள் யாரும் இன்று கண்டறியப் படவில்லை.

தமிழகத்தில் பாதிப்பு: 2,058

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 25

குணமடைந்தோர் எண்ணிக்கை : 1,128

அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

 

மாவட்டம் வாரியாக, இன்று புதிதாக தொற்று அதிகரித்திருக்கும் எண்ணிக்கை,

செங்கல்பட்டு - 12

சென்னை – 103

கள்ளகுறிச்சி – 3

காஞ்சிபுரம் - 1

நாமக்கல் – 2

என மொத்தம் தமிழகத்தில் 121 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment