corona chennai death cases : சென்னையில் 6 மண்டலங்களான தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிகப்படியான கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisment
ஜூன் 14 ஆம் தேதி வரை சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 31,896. இதில் இந்த 6 மண்டலக்களில் மட்டும் 23,011 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மொத்த சதவீதத்தில் 72% இந்த 6 மண்டலங்களில் இருந்து மட்டுமே.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக இருந்தது. அப்போது இந்த 6 மண்டலங்களில் நிலவரம் 51.5%. ராயுபுரம் பகுதியில் மட்டும் 5,300 கொரோனா நோயாளிகள் கண்டறிப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது சென்னையின் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 23,000ஐ தாண்டியுள்ளது.
நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 50 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. இதுப்போன்ற பகுதிகளை அரசாங்கம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே தொற்றை குறைக்க முடியும். சீனா போன்ற மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் முழுமையாக அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 79.9 சதவீதமாகும். இதில் 6 மண்டலங்களில் மரண விகித, 1.2 % என்கிற எண்ணிக்கையில் உள்ளது.நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2,444 பேர் (5 %). இதில் ஆண் குழந்தைகள் 1,263 பேர் (51.6 %) . பெண் குழந்தைகள் 1,181 பேர் (48.4 %).
இந்திய மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் இதுப்பற்றி கூறியிருப்பதாவது, “ அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் கவனம் செலுத்துதல் அவசியம். தனியார் மருத்துவமனைகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த பகுதிகளுக்கு உட்ப்பட்ட சுமார் 7,000 தெருக்களில் தனித்தனியே அனைவருக்கும் சோதனைகள் நடத்தப்படுவது மிக மிக அவசியம். ” என்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”