கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு, மே 13ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு சி்கிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடவுள் இறங்கிட்டான்; இந்தச் சோதனையில் நாம பாஸ் ஆயிரணும்: வடிவேலு வீடியோ
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முழுஉடல் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என பத்திரிகையில் செய்தி வெளியாகிள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இதுகுறித்து அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும் கடந்த விசாரணையின் போது போதுமான மருத்துவ பாதுகாப்பு கவசங்கள் இருப்பு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் செய்தித்தாள் வந்த செய்தி பார்த்தால் போதுமான உபகரணங்கள் கிடைக்காத காரணத்தால் தான் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர் ஆகியோர் பதிக்கபடுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கால அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், மே 13 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.