சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: அனைத்துப் பள்ளிகளையும் மே 2-க்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

இதுதொடர்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

By: Updated: May 1, 2020, 07:11:28 AM

Corona in Chennai Updates: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் எதிர் பார்க்காத அளவுக்கு, கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது அங்கு மொத்தமாக 906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளை மே 2-ம் தேதிக்குள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகள் தயாராக வைத்திருக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 161 பேருக்கு கொரோனா; 8 குழந்தைகளுக்கு வைரஸ் உறுதி

பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவை தமிழக அரசு இதன் மூலம் அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் மூலம் பள்ளிகள், தனியார் நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த இடங்களில் மக்களை தங்க வைக்க அனுமதிக்கலாம்.

அவசர காலத்தில் இந்த இடங்களை அரசு பயன்படுத்த இந்த சட்டம் வழி வகுக்கிறது. தற்போது அதே சட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்து, சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக இந்த பள்ளிகள், அதன் வளாகங்கள் தேவைப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டிருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த சுற்றறிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஜோதிகா சுட்டிக் காட்டிய ”அந்த” மருத்துவமனையில் பிடிபட்ட நச்சு பாம்புகள்!

சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் சென்னையில் வரும் மே 3ம் தேதி பெரும்பாலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை. தொடர்ந்து லாக் டவுன் நீடிக்கும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் சென்னையில் கொரோனா பரவலை அடுத்த 10 நாட்களுக்குள் தடுத்திட வேண்டும் என்று மண்டல வாரியாக அமைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Corona in chennai govt and private schools to be hand overed to govenrment district collector order

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X