“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீசியன்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஏ. கோபிநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், கொடோனா பரிசோதனைக்கு தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுக்கும்போது காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கும் இ.என்.டி. மருத்துவர்களையும்,
ஹோட்டல்களில் குறைந்த விலையில் பார்சல் உணவுகள் – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் லேப் டெக்னீசியன் மூலமாகவே மாதிரிகளை எடுக்க வற்புறுத்தப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். +2க்கு பிறகு டிப்ளமோ மட்டுமே முடித்துள்ள தங்களால், உடலியல் மற்றும் உடற்கூறியல் படித்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளை செய்யக்கூடாது என விதிகள் உள்ளதாகவும், ஆனால் கொரோனா பரிசோதனைகளை மாதிரிகளை எடுக்க வேண்டும் என விதிமுறைகளை மீறும் வகையில் மருத்துவமனையில் உள்ள உயரதிகாரிகள் லேப் டெக்னீசியன்களை கட்டாயப்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா சிகிச்சை வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு உடைகளுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கும் லேப் டெக்னீசியன்கள் சென்று பணிபுரியும்படி கட்டாயப்படுத்த படுகிறார்கள் என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவன விதிமுறைகளை பின்பற்றபடி மத்திய மாநில அரசுகளுக்கும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை முதல்வர்களுக்கும் ஏப்ரல் 1ஆம் தேதி மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ரமலான் நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி – தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
மாதிரிகள் எடுக்க வகுக்கபட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும், லேப் டெக்னீசியன்களை பயன்படுத்த தடை விதிக்க வேம்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Corona test samples lab technicians madras high court
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்