சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது.
Advertisment
இந்நிலையில் சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை கொரோனா உறுதியான 277 பேர் மாயமானதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி அளித்த பட்டியலைக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தவறான முகவரி, செல்போன் எண் கொடுத்த 277 பேரையும் கண்டறியும் முயற்சியில் தற்போது போலீசார் களமிறங்கியுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, தற்போது 90 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புளியந்தோப்பு மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளை சேர்ந்த நபர்களை தான் அதிகம் காணவில்லை.
சென்னையைபொறுத்தவரை, கொரோனா அறிகுறி அல்லது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களின் முகவரி, மொபைல்ஃபோன் ஆகிய விவரங்கள் பரிசோதனை மையங்கள் மூலம் மாநகராட்சி அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.
ஓரிரு நாட்களில் பரிசோதனை முடிவு பாசிட்டிவாக வந்தால், சம்பந்தப்பட்ட நபர்களை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், அவர்களை மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பார்கள்.
“நோயாளியின் முகவரியை வைத்து, அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் பகிரப்பட்டுள்ளது. அவர்கள் நோயாளி வழங்கிய தொலைபேசி எண்களை வைத்து முகவரிகளை சரிபார்த்தனர். சிலரின் எண்கள் சரியாக இருந்தும், முகவரிகள் தவறாக இருந்தது. அவர்களில் சிலர் மொபைல் போன்களைசுவிட்ச் ஆஃப் செய்துவிட்டனர்.
"எங்கள் அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சரிபார்த்து, வழங்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு அழைத்தனர். முகவரி அல்லது தொலைபேசி எண் சரியாக இருந்ததால் 277நபர்களில் சுமார் 90 நபர்களை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. “இது ஒரு கடினமான பணி. சோதனைக்கு வரும் நபரின் ஆதார் அட்டை மற்றும் முகவரி ஆதாரம் சேகரிக்கப்படுவதை ஆய்வக ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“