அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி – தீவிர சிகிச்சை

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் முயற்சித்து வருகின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான வுஹானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஜாம்பீஸ் படம் பார்ப்பது போன்று, யாரைப் பார்த்தாலும் தெறித்து ஓட வேண்டிய சூழல் நிலவுகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,070 லிருந்து 3,097 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651 லிருந்து 80,696 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு; அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் முயற்சித்து வருகின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விமான நிலைய மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுவனை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு விமான நிலைய மருத்துவக்குழுவினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தனிமைபடுத்தி தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

முன்னதாக, ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோயாளிகளுக்கு தங்கள் அழகை தானமாக அளித்த 80 கல்லூரி மாணவிகள்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus affected chennai boy from usa

Next Story
தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது: மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்Tamil Nadu assembly live today updates : சட்டசபை கூட்டத்தொடர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com