Corona Virus Today Reports in Tamil Nadu: தமிழகத்தில் ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,16,944ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36,02,502ஆக உயர்வு. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,13,62.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் தமிழகமும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று (ஜூன்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது.
ரசிகர்களை அறிக்கை வாயிலாக 'உஷார்' படுத்திய ரஜினிகாந்த்! - அந்த பன்ச் செம!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இன்று 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
#COVIDー19 Status:#Tamilnadu
தமிழகத்தில் இன்று புதிதாக 1685 பேர் உள்பட மொத்தம் 34914 பேர் பாதிப்பு
சென்னையில் மட்டும் 1243 பேர் உள்பட மொத்தம் 24545 பேர் பாதிப்பு
இன்று 798 பேர் உள்பட மொத்தம் 18325 பேர் குணமடைந்துள்ளனர்
இன்று 21 பேர் உள்பட மொத்தம் 307 பேர் உயிரிழப்பு pic.twitter.com/ixcBDR2M5U
— PIB in Tamil Nadu ???????? (@pibchennai) June 9, 2020
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,243 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 798 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 18,325 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.