சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,392 பேருக்கு கொரோனா
COVID-19 Tamil Nadu Reports Today: தமிழகத்தில் இன்று மேலும் 4549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல், அதிகபட்சமாக சென்னையில் 1,157 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
Advertisment
இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று (ஜுலை.16) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,483 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 66 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 107 ஆய்வகங்கள் (அரசு-54 மற்றும் தனியார் 53) மூலமாக, இன்று மட்டும் 45,888 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 17 லட்சத்து 82 ஆயிரத்து 635 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,794 பேர் ஆண்கள், 1,755 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 95,308 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 61,038 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக உள்ளது.
Advertisment
Advertisements
இன்று மட்டும் கொரோனா பாதித்த 69 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,236 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,714 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இதுவரை 65,748 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,038 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு
சென்னை - 1,157
திருவள்ளூர் - 526
மதுரை - 267
வேலூர்-253
தி.மலை - 212
செங்கல்பட்டு - 179
தூத்துக்குடி - 171
குமரி - 146
ராணிப்பேட்டை-145
விருதுநகர் - 145
நெல்லை - 130
திண்டுக்கல் - 126
விழுப்புரம்-105
திருச்சி -94
ராமநாதபுரம் - 90
சிவகங்கை - 83
தேனி-78
க.குறிச்சி-71
சேலம் -70
காஞ்சிபுரம் - 67
கோவை - 52
புதுக்கோட்டை-50
நீலகிரி-44
திருப்பூர்-39
தர்மபுரி - 27
திருப்பத்தூர் - 27
தஞ்சை-25
கடலூர்-22
கிருஷ்ணகிரி-21
தென்காசி - 20
திருவாரூர் -20
நாமக்கல் - 18
அரியலூர்-12
பெரம்பலூர் - 10
ஈரோடு - 8
நாகை - 8
கரூர்- 7
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil