TN Corona Virus Cases Today: தமிழகத்தில் இன்று (ஆக.7) மொத்தம் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,85,024-ல் சென்னையில் மட்டும் 1,07,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,27,575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisment
இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 24 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,14,931.
இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,896 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 119 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 78 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,690 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,272 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 115 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 4 பேர்"
என்று சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”