சென்னையில் இதுவரை 11,000 பேருக்கு கொரோனா பாதிப்பு: தமிழக எண்ணிக்கை 17,000-ஐ தாண்டியது
COVID-19 Reports Tamil Nadu: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
corona virus, corona latest news, coronavirus update in india, , coronavirus news update, coronavirus latest news update, coronavirus death toll, corona virus, corona virus in south india, corona virus news update,chennai containment zone
Corona Virus Cases in Tamil Nadu Today Reports: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,082-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், "தமிழகத்தில் இன்று (மே.25) மேலும் புதிதாக 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,277 இல் இருந்து 17,082 ஆக அதிகரித்துள்ளது.
— PIB in Tamil Nadu ???????? #StayHome #StaySafe (@pibchennai) May 25, 2020
சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,125ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 4,21,480 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 8,731 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்; இன்று மட்டும் 407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், தமிழகத்தில் இதுவரை 118 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.69% ஆக உள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்ச மாதிரிகள் சோதனையிட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை 4,21,480 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்குள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களால் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது புது சவாலாக இருக்கிறது. அந்தவகையில் இன்று மட்டும் 93 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக மஹா.,வில் 726 பேரும், குஜராத்தில் இருந்து வந்தவர்கள் 26 பேரும் உள்ளனர்.
கொரோனா பாதித்தவர்களில் 88 சதவீதத்தினருக்கு எந்த அறிகுறியும் இல்லை. விமானத்தின் மூலம் தமிழகம் வரும் பயணிகளில் அறிகுறி இருப்பவர்களை உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கையில் தனிமைப்படுத்தலுக்கான அச்சிடப்பட்டு, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் செல்பவர்களும் பரிசோதனை செய்யப்பட்டே அனுப்பப்படுகிறார்கள்" என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil