corona virus, corona latest news, coronavirus update in india, , coronavirus news update, coronavirus latest news update, coronavirus death toll, corona virus, corona virus in south india, corona virus news update,chennai, tamil nadu chennai koyembedu, modi, dmk கொரோனா வைரஸ், தமிழ்நாடு, கொரோனா வைரஸ் தொற்று, பாதிப்பு, கொரோனா சோதனை, சென்னை, மத்திய உள்துறை அமைச்சகம், ஊரடங்கு
தமிழகத்தில் இன்று மேலும் 817 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,545-ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று (மே.27) மேலும் புதிதாக 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 17,728 -ல் இருந்து 18,545 ஆக அதிகரித்துள்ளது.
817 நபர்களில் 678 பேர் தமிழகத்திலும், 138 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் கேரளாவில் இருந்தும் வந்தவர்கள். இன்று ஒரே நாளில் சென்னையில் 4 பேரும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒருவரும் என 6 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 133 ஆக உள்ளது. 567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,909 ஆக உயர்ந்துள்ளது.
— PIB in Tamil Nadu ???????? #StayHome #StaySafe (@pibchennai) May 27, 2020
தற்போது 8,500 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 70 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 11,231 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய பாதிப்புகளில் ஆண்கள் 508 பேர், பெண்கள் 309 பேர். மொத்த பாதிப்பில் 12 வயதுக்குள் உள்ளவர்கள் 1,122 பேர், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 15,796 பேர், 60 வயதை கடந்தவர்கள் 1,627 பேர் உள்ளனர்.
சென்னையில் மேலும் 558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil