தமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,372-ஆக அதிகரித்துள்ளது. அதோடு ஒரே நாளில் 12 பேர் மரணித்திருக்கிறார்கள். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்திருக்கிறது.
Advertisment
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் இன்று (மே.28) மேலும் புதிதாக 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18,545 -ல் இருந்து 19,372 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 827 பேர் உள்பட மொத்தம் 19372 பேர் பாதிப்பு
சென்னையில் மட்டும் 559 பேர்
639 பேர் உள்பட மொத்தம் 10548 பேர் குணமடைந்துள்ளனர்
— PIB in Tamil Nadu ???????? #StayHome #StaySafe (@pibchennai) May 28, 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்தது.
பிரான்ஸ் (15%), இத்தாலி (14%), இங்கிலாந்து (14%) போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.7% என மிகக் குறைவானதாகவே உள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1,159 குழந்தைகள் குணப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்று 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரு நாளில் 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”