COVID-19 Tamil Nadu: தமிழகத்தில் ஆறு பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், நோயாளிகளின் தொடர்புகளைக் கண்டறிய இப்போது தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசத்தின் ராம்பூரிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு பயணம் செய்த 20 வயது இளைஞரின் விஷயத்தில் இந்த சிக்கல் தீவிரமாகியுள்ளது.
அந்த இளைஞருக்கு நாட்டிற்கு வெளியே பயணம செய்த வரலாறு இல்லாததால், இது சமூகப் பரவலுக்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன. இருப்பினும் சுகாதார அமைச்சர் இந்த காரணத்தை மறுத்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 ஆனது
வெள்ளிக்கிழமை, கேரள அரசு ஒரு செய்தியை வெளியிட்டது, அதில், “மார்ச் 10 ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்த ரயில் எண் 12622 தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸின் எஸ் 7 பெட்டியில் யாராவது பயணம் செய்தீர்களா? அப்படியானால், மாநில கட்டுப்பாட்டு அறை எண் 04712309250 முதல் 55 ஐ தொடர்பு கொள்ளவும். தயவுசெய்து இத்தகவலை பகிருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர், பயணத்தின் போது எஸ் 5 மற்றும் எஸ் 7 பெட்டிகளுக்கு இடையே சென்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அவர் மூன்று நண்பர்களுடன் பயணம் செய்தார். அதில் இருவர் எஸ் 5 மற்றும் இரண்டு எஸ் 7 பெட்டிகளில் பயணம் செய்தனர். எனவே கொரோனா பாதிக்கப்பட்ட அந்த நபர் இந்த பெட்டிகளுக்கு இடையே சென்று வந்திருக்கிறார். அந்த நபர், மார்ச் 7 அன்று ராம்பூரிலிருந்து டெல்லிக்கு வந்தார். அவர் மார்ச் 10 வரை அங்கேயே இருந்தார். டெல்லியில் இருந்தபோதும் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார், மேலும் அங்குள்ள ஒரு உள்ளூர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார். சென்னைக்கு வந்தபின், அவரது உடல்நிலை மோசமடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் வரை அவர் சில இடங்களைச் சுற்றிப் பார்த்தார். அவரது உடல்நிலை இன்னும் மோசமாக, ஆர்.ஜி.ஜி.எச். ஐ அணுகிய போது கோவிட்-19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை அறிவித்து, மாநிலங்கள் போக்குவரத்தை குறைப்பது ஒரு பீதி சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. “கடந்த மூன்று நாட்களில் பயணிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது உண்மையில் சவாலானது மற்றும் கவலை அளிக்கிறது.”
சர்வதேச இடங்களிலிருந்து வந்த முதல் மற்றும் மூன்றாவது பாதிக்கப்பட்டவரின் விஷயத்தில் கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சிகள் மிகவும் எளிதாக இருந்தன. பாதிக்கப்பட்ட முதல் நபர், காஞ்சீபுரத்தில் வசிப்பவர், ஓமானில் இருந்து வந்தார், பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் சென்னையில் விருகம்பாக்கத்தில் வசிப்பவர், டூப்ளினில் இருந்து திரும்பி வந்தார். சனிக்கிழமையன்று தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரை பொறுத்தவரை, அவர்களின் தொடர்புகளைத் தனிமைப்படுத்தவும் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு பேரிடமும் நேரடியாக தொடர்பு கொண்ட நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஐ.ஆர்.டி மருத்துவமனையில் இரண்டு தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், ”என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
நோயாளிகளைக் கண்காணிக்க புதிய ஆப்
இதற்கிடையில், வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் நோயாளிகளைக் கண்காணிக்க ஒரு மொபைல் ஆப்-ஐ சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் வீடியோ அழைப்புகள் மூலம் அவர்களுடன் இணைந்து, தகவல்கள் குறித்து விவாதிக்க முடியும். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்களா என்பதையும் அவர்கள் சரிபார்க்கலாம். ஒரு நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகளை இணைக்கும் திறன் அதன் செர்வருக்கு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”