Corona Virus Cases in Tamil Nadu: சென்னையில் புதிதாக 47 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி, மொத்தம் 570-ஆக அதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது.
Advertisment
அதில் சென்னையில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 90 சதவீதத்துக்கும் மேல் அதிக அளவில் 47 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 523 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது.
பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பில்,
Advertisment
Advertisements
தமிழகத்தில் நேற்று வரை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 362 பேர்.
28 நாட்கள் தனிமைப்படுத்துதலைப் பூர்த்தி செய்தவர்கள் 87 ஆயிரத்து 159 பேர்.
தற்போது தனிமையில் இருப்பவர்கள் 29 ஆயிரத்து 797 பேர்.
இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 7,176.
இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 52.
தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 33 பேர். பெண்கள் 19 பேர்.
இன்றைய மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,937.
இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 81 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,181 பேர்.
இதுவரை மொத்தம் உயிரிழந்தவர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 523 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பெரு நகரங்களில் சென்னை 500 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை 141, திருப்பூர் 111, திண்டுக்கல் 80 ,ஈரோடு 70 என்கிற அதே எண்ணிக்கையுடன் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. புதிதாக சென்னையில் 47, மதுரை 4, விழுப்புரத்தில் 1 என மொத்தம் 3 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.
தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டதில் விழுப்புரத்தில் ஒரு தொற்று உறுதியானது. அது ஒரு வயதுக் குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 111 பேர். இதில் ஆண் குழந்தைகள் 60 பேர். பெண் குழந்தைகள் 51 பேர்.
13 முதல் 60 வயது உள்ளவர்கள் 1600 பேர். இதில் ஆண்கள் 1,093 பேர். பெண்கள் 507 பேர்.