தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 161 பேருக்கு கொரோனா; 8 குழந்தைகளுக்கு வைரஸ் உறுதி
COVID-19 Tamil Nadu Reports Today: சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது
COVID-19 Tamil Nadu Reports Today: சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது
corona virus in Tamil nadu latest reports chennai covid 19
Corona Latest TN Reports: தமிழகத்தில் இன்று (ஏப்.,30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 27 ஆக உள்ளது.
Advertisment
தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு இல்லாததால் பலி எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 48 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்தம் 1258 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1035 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது 31,375 பேர் வீட்டுக்கண்காணிப்பிலும், 40 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். இன்று மட்டும் 9,787 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,10,718 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 161 பேரில் 8 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 54.15 % பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,553 ஆண்கள், 770 பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு
மாவட்டம் வாரியாக, இன்று புதிதாக தொற்று அதிகரித்திருக்கும் எண்ணிக்கை,
அரியலூர் - 1
செங்கல்பட்டு – 5
சென்னை – 138
கடலூர் - 1
காஞ்சிபுரம் – 3
மதுரை - 5
பெரம்பலூர் - 2
ராமநாதபுரம் - 3
ராணிபேட்டை - 1
சேலம் - 1
திருவள்ளூர் – 1
என மொத்தம் தமிழகத்தில் 161 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”