Corona Virus Today Reports in Tamil Nadu: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முப்பதாயிரம் தாண்டியது.
Advertisment
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் தமிழகமும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை நேற்று (ஜூன்.6) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. 1,458 நபர்களில் 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். ஒரே நாளில் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,76, 695 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களில் 11,446 பேர் ஆண்கள். 9,469 பேர் பெண்கள். 17 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 12 வயதுவரை உள்ளவர்களில், 1,638 பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில், 25, 385 பேரும், பிறமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 1423 பேரும் உள்நாட்டு விமானம் மூலம் வந்தவர்களில் 35 பேரும் அடங்குவர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,146 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 20.993 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 95 பேருக்கும், திருவள்ளூரில் 79 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,395-ஆக உயர்ந்துள்ளது. 13503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil