தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கொரோனா தொற்று - எண்ணிக்கை 13,000 கடந்தது
COVID-19 Cases in TN: சென்னையில் அதிகபட்சமாக 557 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மண்டலங்களில் 8 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
COVID-19 Cases in TN: சென்னையில் அதிகபட்சமாக 557 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மண்டலங்களில் 8 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
Corona Virus Cases in Tamil Nadu Today Reports: தமிழகத்தில் மேலும் புதிதாக 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,000 கடந்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று (மே.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று புதிதாக 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 83 பேர் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 13,191 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 2 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 987 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,882 ஆக உள்ளது.
தற்போது 7,219 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 63 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று 11,894 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 803 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 11,381 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1007 பேரும் உள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் அதிகபட்சமாக 557 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மண்டலங்களில் 8 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு:
செங்கல்பட்டு- 58
சென்னை- 557
காஞ்சிபுரம்- 14
புதுக்கோட்டை-1
தென்காசி- 1
தஞ்சாவூர்- 1
தேனி- 1
திருவள்ளூர்- 23
தூத்துக்குடி-1
விழுப்புரம்- 1
விருதுநகர்-1
ரயில்வே தனிமைப்படுத்துதல் முகாமில் 1 என மொத்தம் 660 பேர், மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்கள் 83 பேர் என மொத்தம் 743 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil