Corona Latest TN Reports: சென்னையில் ஒரேநாளில் 316 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Advertisment
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
Advertisements
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 580 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்று மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையில் இன்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 2,644 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஓரே நாளில் 14,102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட நபர்கள் 1,92,574.
ஆக்டிவ் கேசஸ், அதாவது தொடர் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,822 ஆக உள்ளது.
இன்று 31 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,547-ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு
மாவட்டம் வாரியாக, இன்று புதிதாக தொற்று அதிகரித்திருக்கும் எண்ணிக்கை,
அரியலூர் – 24
செங்கல்பட்டு – 13
சென்னை – 316
கடலூர் – 32
கள்ளக்குறிச்சி – 1
காஞ்சிபுரம் - 2
கரூர் - 2
கிருஷ்ணகிரி - 4
பெரம்பலூர் - 33
புதுக்கோட்டை - 2
ராமநாதபுரம் - 2
ராணிப்பேட்டை - 7
தஞ்சாவூர் - 2
தேனி - 3
திருப்பத்தூர் - 2
திருவள்ளூர் – 63
திருவண்ணாமலை – 17
தூத்துக்குடி - 1
திருநெல்வேலி - 3
திருச்சி - 5
வேலூர் - 1
விழுப்புரம் – 45
என மொத்தம் தமிழகத்தில் 580 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”