தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,246-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ தாண்டிய நிலையில், 23 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று (மே.29) மேலும் புதிதாக 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 19,372 -ல் இருந்து 20,246 ஆக அதிகரித்துள்ளது.
ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கக் கூடாது? – ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,313 ஆக அதிகரித்தது.
சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 13,362 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தவர்கள் – 6,895
சிகிச்சையில் உள்ளவர்கள் – 6,353
உயிரிழப்பு – 113
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த 7 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரை சேர்ந்த தலா ஒருவர் பலி. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை தவிர்த்து அதிகபட்சமாக செங்கல்பட்டில் 61 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 12 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 37-ல், 23 மாவட்டங்களில் யாருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. கோவை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவரும் குணம் அடைந்துஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”