கொரோனா பரிசோதனைக்கு நடமாடும் பரிசோதனை மையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என, மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், வீடுகள் இல்லாமல் சாலைகளில் வசித்து வரும் பெரும்பாலானோர் இந்த தொற்றின் விளைவுகள் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளன.
இவர்கள் மூலமாக கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளதால், சாலைகளில் வசிப்பவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்ய தனி குழு அமைக்கக்கோரி திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் அமல் ஆண்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வாட்ஸ்ஆப் மூலம் உறவினர்களிடம் பேச நளினி, முருகனை அனுமதிக்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு
அந்த மனுவில், அனைத்து மாவட்டங்களிலும், நடமாடும் பரிசோதனை மையங்களை அமைக்க வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்ய 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நிலையில், கட்டணத்தை 500 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய சுகாதாரத் துறையின் மூத்த மண்டல மேலாளர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதி்ல், கொரோனா பரவலை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் அதில், நடமாடும் பரிசோதனை மையங்களை அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், பொருளாதார ரீதியில் தற்சார்பு பெறாத மக்களுக்கு பரிசோதனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 434 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ்
அதேபோல, தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தினந்தோறும் அதிகளவில் மக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் விளக்கங்களை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.