டெல்லி மாநாட்டிற்கு வந்துவிட்டு, மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும் இந்திய அரசு நிறுத்து வைத்துள்ளது. இதனால், ஏராளமான மலேசிய நாட்டினர் தமிழ்நாட்டில் சிக்கி தவித்தனர். மலேசிய அரசு இந்திய அரசிடம் பேசி அவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தங்களது நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறது.
சினிமா ‘டூ’ கொரோனா : உங்களின் கேள்விகளுக்கு இன்று பதில் அளிக்கிறார் நடிகை கஸ்தூரி!
இதுவரையில் 8 சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 1500க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சென்னையில் இருந்து மலேசியா சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 10.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பாடிக் ஏர்லைன்ஸ் என்ற சிறப்பு தனி விமானம் புறப்பட தயாரானது. அதில் தமிழகத்தில் தங்கியிருந்த 137 மலேசியர்கள் செல்ல இருந்தனர்.
இவர்களில் 127 பேரை மலேசிய தூதரக அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை நடத்தப்பட்டது. மீதமுள்ள 10 மலேசியர்கள், டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் விசாவில் டெல்லிக்கு வந்தது தெரியவந்தது.
10 மலேசியர்களும் மாநாட்டில் கலந்து கொண்டு மார்ச் 11 வரை டெல்லியில் நிஜாமுதீனில் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மார்ச் 12 ஆம் தேதி ரயிலில் சென்னை வந்து மார்ச் 13 அன்று தென்காசி சென்றனர்.
“மார்ச் 14 முதல் 26 வரை, இரண்டு உள்ளூர்வாசிகளான மௌலானா ஹமீத் மற்றும் மௌலானா மொய்தீன் ஆகியோருடன், அவர்கள் ஜமாஅத் நடவடிக்கைகளுக்காக தென்காசி, குற்றாலம் மற்றும் வல்லம் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு மசூதிகளுக்கு சென்று வந்தனர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
அப்போது அவர்கள் மலேசிய அரசு, சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து செல்வதை கேள்விப்பட்டு சென்னையில் உள்ள மலேசிய துணை தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் டெல்லி மாநாட்டுக்காக வந்ததை தூதரக அதிகாரிகளிடம் மறைத்துவிட்டனர்.
புலிக்கும் கொரோனா தொற்று – அமெரிக்காவில் தான் இந்த பயங்கரம்
ஆனால் குடியுரிமை அதிகாரிகள் 10 பேரிடம் நடத்திய சோதனையில் டெல்லி மாநாட்டிற்கு வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அந்த 10 பேரின் மலேசிய பயணத்தை ரத்து செய்தனர். மீதமிருந்த 127 பயனிகளுடன் சிறப்பு தனி விமானம் நேற்று பகல் 11.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை பலமுறை வேண்டுகோள் விடுத்தும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற இவர்கள் 10 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படாமல் மலேசியாவுக்கு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். எனவே அவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த 10 பேரும் தென்காசியில் யார் யாரை சந்தித்தனர். எங்கு தங்கியிருந்தனர் என விமான நிலைய மருத்துவக் குழுவினர் தென்காசி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil